மஹிந்த ராஜபக்ஷவும் மைத்திரிபால சிறிசேனவும் தாம் அரசாங்கத்திடம் கையளித்த பாதுகாப்பு வாகனங்களை மீண்டும் தருமாறு கோரிக்கை

மஹிந்த ராஜபக்ஷவும் மைத்திரிபால சிறிசேனவும் தாம் அரசாங்கத்திடம் கையளித்த பாதுகாப்பு வாகனங்களை மீண்டும் தருமாறு கோரிக்கை

தங்கள் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட வாகனங்களைத் திருப்பித் தருமாறு முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷவும் மைத்திரிபால சிறிசேனவும் கோரிக்கை விடுத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு வாகனங்களை வழங்குவதன் மூலம் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்கு அச்சறுறுத்தல் ஏற்படுமானால் அந்த வாகனங்களைத் திருப்பித் தர வாய்ப்புள்ளது என அமைச்சர் ஆனந்த விஜேயபால கூறினார். தாம் இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் தாம் இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏற்கனவே தெரிவித்ததையும் சுட்டிக்காட்டினார்

முன்னாள் ஜனாதிபதிகளின் கோரிக்கை தாற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பாதுகாப்பு மீளாய்வுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர்களின் முடிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )