
மனுஷா நாணயக்கார இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானார்
முன்னாள் அமைச்சர் மனுஷா நாணயக்கார இன்று(15) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாகவே அவர் வாக்குமூலம் அளிக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

