
அமைச்சுக்களுக்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது
பல அமைச்சுக்களின் பொறுப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார்.
இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்துடன் இணைந்து இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

