
பருத்தித்துறை வர்த்தக சங்கத்தினர் மற்றும் மரக்கறி சந்தை வியாபாரிகள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம்
பருத்தித்துறை வர்த்தக சங்கத்தினர் மற்றும் மரக்கறி சந்தை வியாபாரிகள் இணைந்து பருத்தித்துறை நகரில் இன்று (24) கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
நகரின் மையப் பகுதியில் அமைந்திருந்த மரக்கறிச் சந்தையை , மீன் சந்தை வீதியில் புதிதாக கட்டடம் ஒன்றை நிர்மாணித்து அங்கு வியாபாரிகளை பருத்தித்துறை நகரசபை செயலாளர் தலைமையில் மாற்றம் செய்து வைக்கப்பட்டது.
ஆனாலும் புதிய சந்தைக் கட்டடம் போதிய இடவசதிகளோ அல்லது போக்குரத்து வசதிகள் குறைந்தவையாகவும், மழை நேரங்களில் வெள்ளம் தேங்கி நிற்ப்பதாகவும், நகரில் இருந்து மரக்கறிச் சந்தை தூரம் என்பதால் பொது மக்கள் சந்தையை நாடுவது குறைவு ஆகையால் எமது வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மரக்கறி வியாபாரிகள் பல தடவை போராட்டம் நடாத்தி நகரசபை தவிசாளர் உள்ளிட்டோரிடம் மகஜர்களை கையளித்திருந்தனர்.
வியாபாரிகளின் கோரிக்கைக்கு அமைய நகரசபை அமர்வின் போது நிபுனர்குழு ஒன்று உருவாக்கப்பட்டு ஆராய்ந்து முடுவெடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
ஆனாலும் இது வரை வியாபாரிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றுப்படாத நிலையில் மரக்கறி வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து போராட்டத்தை நடாத்தி வருகின்றனர்.
ஆனாலும் சில மரக்கறி வியாபாரிகள் புதிய மரக்கறிச் சந்தை தமக்கு திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

