செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி போராட்டம்

செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி போராட்டம்

யாழ்ப்பாணம் கிறிஸ்தவ ஒன்றியத்தினர், செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டியும், பாதிக்கப்பட்ட மக்களுடன் ஆதரவாக செயற்படுகின்றோம் என்பதைக் காட்டும் முகமாகவும் இன்றையதினம் செம்மணி பகுதியில் இன்று (30) போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

செம்மணி புதைகுழி விவகாரத்திற்கு உண்மையான நீதி கிடைக்கப்பெற்று மக்களின் கண்ணீருக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி புதைகுழி அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தின் வாயிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது பேரணியாக செம்மணிச் சந்திவரை சென்றது.

இதில் பேராயர்கள், கிறிஸ்தவ மதகுருக்கள், அருட்சகோதரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )