
கேகாலை மாவட்டத்தில் அனர்த்த வீடமைப்பு திட்டத்தின் கீழ் 15 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு அனுமதி
கேகாலை மாவட்டத்தின் அனர்த்த வீடமைப்பு திட்டத்தின் கீழ் 15 புதிய வீடுகளை நிருமாணிப்பதற்காக தற்போது அனுமதி வழங்கப்பட்டது.
இது பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சின் தோட்டப் பகுதிகளில் அனர்த்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு NBRO அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள 5 அதிக ஆபத்தில் உள்ள குடும்பங்களின் பயனாளிகளுக்கு 5 வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (03) யட்டியந்தோட்டை கணேபள்ள தோட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நந்தன மில்லகல மற்றும் கேகாலை மாவட்ட செயலாளர் ஜகத் ஹேரத் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
கட்டப்படவுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் 3.2 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, அதில் வீடு கட்டுவதற்கு ரூ. 2.8 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, நீர், மின்சாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 0.4 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த 5 வீடுகளின் கட்டுமானத்திற்கு ரூ. 16 மில்லியன் செலவாகும்.
இந்த வீடுகளின் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
யட்டியந்தோட்ட பிரதேச சபையின் தலைவர், அரசு அதிகாரிகள் மற்றும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கேகாலை மாவட்ட ஊடகப் பிரிவு

