
ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் இரு அமைப்பாளர்கள் இராஜினாமா
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்களில் மேலும் இருவர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளர் அசோக சேபாலவும் ஹொரொவபொத்தானை அமைப்பாளர் அனுர புத்திக்கவும் தமது அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.
இதேவேளை, மாத்தளை பிரதான அமைப்பாளர் வசந்த அலுவிஹாரே, தம்புள்ள பிரதான அமைப்பாளர் சம்பிகா விஜேரத்ன மற்றும் ரத்தோட்டை தொகுதி அமைப்பாளர் ரஞ்ஜித் அலுவிஹாரே ஆகியோர் இராஜினாமா கடிதங்களை நேற்று (24) அனுப்பிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

