
காத்தான்குடியில் சுனாமி ஒத்திகை
சர்வதேச சுனாமி தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் பிரதான சுனாமி ஒத்திகை மற்றும் பாதுகாப்புப் பயிற்சி இன்று (05) காலை காத்தான்குடியில் இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 167C கிராம சேவகர் பிரிவில் நடைபெற்ற இவ்வொத்திகையில் இராணுவம், பொலிஸார், கடற்படையினர், தன்னார்வ தொண்டர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இவ்வொத்திகைக்கான ஏற்பாடுகளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும், சம்பந்தப்பட்ட பிரதேச செயலகம் இணைந்து மேற்கொண்டிருந்தன.
சுனாமி எச்சரிக்கை குழுமத்தில் எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டு, ஒத்திகை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
CATEGORIES Sri Lanka

