
2030 ஆம் ஆண்டுக்குள் கடனை 87% ஆகக் குறைக்க நடவடிக்கை
2030 ஆம் ஆண்டுக்குள் கடனை 87% ஆகக் குறைக்க அரசு எதிர்பார்ப்பதோடு, குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக வழங்கப்படும் அஸ்வெசுமவை 2026 ஆம் ஆண்டு மீண்டும் மீளாய்வு செய்ய நடவடிக்கை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் வரவு – செலவுத் திட்டத்துக்கான வாசிப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர், அரச ஊழியர்களின் சம்பளத்தை 3 கட்டங்களாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

