பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவை 

பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவை 

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடாத்தும் பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவையானது நேற்று (12) பிரதேச செயலாளர் அவர்களின் தலைமை மற்றும் வழிகாட்டுதலில், உதவி பிரதேச செயலாளர் அவர்களின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் இதுவரை காலமும் பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்றுக்கொள்ளாத சுமார் 50இற்கும் மேற்பட்டோருக்கான பதிவு சான்றிதழ்களை உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் இதன் போது மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் திரு கே. பேரின்பநாயகம், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நடமாடும் சேவையினை பிரதேச செயலக பதிவாளர் மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் இணைந்து ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )