
யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயம்
வவுனியா, சின்னடம்பனில் இன்று (13) யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொழில் காரணமாக தனது துவிச்சக்கரவண்டியில் பயணித்தபோதே குறித்த முதியவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
பெரியமடு, நெடுங்கேணியைச் சேர்ந்த 61 வயதான நாகேசு தெய்வேந்திரன் என்பவரே இவ்வாறு படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
CATEGORIES Sri Lanka

