
மட்டக்களப்பில் பாதசாரி கடைவையில் 60 வயதானவர் வேன் மோதி உயிரிழப்பு
பொலன்னறுவை-ஹபரண மட்டக்களப்பு வீதியில் பாதசாரி கடைவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாதசாரி கடவையைக் கடக்கச் சென்றவர் மீது வேன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி, பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் வேனின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
CATEGORIES Sri Lanka

