ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

பனாமுரே மித்தெனியா வீதியின் லெல்லவலப் பகுதியில் ஐஸ் வகை போதைப்பொருளை வைத்திருந்த இரு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இவர்கள் மீது நடத்திய சோதனையின் போது, 190 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 36 வயதுடைய செவனகல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பனாமுரே பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )