
இளைஞர் சேவைகள் மன்றம் ஆரம்பித்த 1 Million Volunteers நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பம்
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் (National Youth Services Council – NYSC) ஆரம்பித்த 1 Million Volunteers திட்டத்தின் முதல் நிகழ்ச்சி அண்மையில் (5ஆம் திகதி) சிலாபத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி, வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட சிலாபம் பிரதேசத்தில் பல இடங்களில் வீதிகள் மற்றும் பொது இடங்களை சுத்தப்படுத்தும் பணி அதன் முதல் திட்டமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்த முதல் நிகழ்ச்சி இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், அதனுடன் இணைந்த விளையாட்டு நிறுவனங்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், தேசிய இளைஞர் படை (National Youth Corps – NYC), மற்றும் இளைஞர் கழகங்களின் தேசிய சம்மேளனம் (Youth Club National Federation) ஆகியன இணைந்து நடத்தின. இதற்காக 300க்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் இணைந்திருந்தனர்.
1 Million Volunteers திட்டத்தின் கீழ் ஒரு தன்னார்வ சேவைக் குழுவை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கான பதிவுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகிள் படிவத்தை பூர்த்தி செய்து எந்தவொரு இளைஞனும் அல்லது யுவதியும் இதில் இணைந்துகொள்ள முடியும்.
அதன்படி, டிசம்பர் 5ஆம் திகதி சிலாபம் பிரதான வைத்தியசாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், இச்சன்பிட்டிய, மெல்புர ஆகிய பிரதேசங்களில் இந்த சுத்தப்படுத்தும் பணிகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்/ பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன, தேசிய இளைஞர் படையின் பணிப்பாளர்

