RDA பணியாளரை தாக்கிய நபர் கைது

RDA பணியாளரை தாக்கிய நபர் கைது

கண்டி – குஹாகொட வீதியில் மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த RDA தொழிலாளி ஒருவரைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாக்குதல் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

நேற்று (13) சாலையில் இருந்து மண் மற்றும் கற்களை அகற்றிக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவருக்கும் அதே வீதியில் பயணித்த லொறியில் இருந்த ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இதன் போது லொறியில் இருந்த நபர் தொழிலாளியைத் தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )