மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப் வாகனம் யானை மீது மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு                                                        தம்புள்ளை – ஹபரணை வீதியில் சம்பவம்

மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப் வாகனம் யானை மீது மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு தம்புள்ளை – ஹபரணை வீதியில் சம்பவம்

தம்புள்ளை – ஹபரணை வீதியில் திகம்பதஹ பிரதேசத்தில் ஜீப் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் வீதியில் இருந்த காட்டு யானை மீது மோதியதில் , மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதுடன் ஜீப் வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 22 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

காயமடைந்தவர்கள் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )