மத்திய மாகாணத்தில் மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை

மத்திய மாகாணத்தில் மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை

மத்திய மலைநாட்டில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக இன்று (19) மற்றும் திங்கட்கிழமை (22) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க மத்திய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போதைய ஆபத்தான சூழ்நிலை காரணமாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதில் ஏற்படும் சிரமங்களைக் குறைப்பதற்காக, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோனின் ஒப்புதலுடன் மாகாண கல்வி அமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளது.

அதன்படி, மத்திய மாகாண கல்வி அமைச்சும் திணைக்களமும் 19 மற்றும் 22 ஆம் திகதிகளில் மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்ட ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )