
2026 ஜனவரி 05 திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பமாகின்றன
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ்ப் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல் ஜனவரி 4, 2026 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து பாடசாலைகளும் 2026 கல்வியாண்டின் முதல் தவணையின் முதல் கட்டத்தை ஜனவரி 05, 2026 திங்கட்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2026 கல்வியாண்டின் முதல் தவணை 2025.12.09 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி நடைமுறைப்படுத்தப்படும் .
மேலும், 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணைகள் 2025.09.11 திகதியிடப்பட்ட 30/2025 என்ற சுற்றறிக்கையின்படி நடைமுறைப்படுத்தப்படும் .
கல்வி அமைச்சால் அறிவிக்கப்பட்ட பாடசாலை திகதிகளில் எந்த மாற்றமும் இருக்காது என்பதை அறிக்கையினூடாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, சிங்கள மற்றும் தமிழ்ப் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டு நேற்று முடிவடைந்தது.
மேலும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025 டிசம்பர் 26 வெள்ளிக்கிழமை பாடசாலை விடுமுறை வழங்கப்படுகிறது..
2025.12.27 முதல் 2026.01.04 வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

