
டிகோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட மீன்பிடி படகில் 200 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது 5 சந்தேகநபர்கள் கைது
கடற்படையினரால், தெற்கு கடலில் கைப்பற்றப்பட்டு டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட பல நாள் மீன்பிடி படகில் 21 கிலோகிராமுக்கு அதிகமான ஹெராயின் மற்றும் 172 கிலோகிராம் ஐஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த போதைப்பொருள் இருப்பின் மதிப்பு சுமார் 200 கோடி ரூபாய் என பாதுகாப்பு துணை அமைச்சர் அருண ஜெயசேகர கூறுகிறார்.
கடந்த 9 ஆம் திகதி கந்தர பகுதியில் இருந்து 05 மீனவர்களுடன் புறப்பட்ட குறித்த மீன்பிடி படகு நேற்று (23) போதைப்பொருள் கொண்டு செல்லும் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட மீன்பிடி படகை சோதனை செய்தபோது ஐஸ் மற்றும் ஹெராயின் அடங்கிய 11 பைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
CATEGORIES Sri Lanka

