
மினுவாங்கொடையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் கைது
மினுவாங்கொடை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, குறித்த சந்தேகநபர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, அதற்கான மெகஸின் ஒன்றும், டி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 25 தோட்டாக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் 43 வயதுடையவர் என்றும், மினுவாங்கொடை ஹீனட்டியன பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

