ஜோஹான் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்

ஜோஹான் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்

பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வரான ஜோஹான் பெர்னாண்டோ, எதிர்வரும் ஜனவரி 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வத்தளை நீதிமன்றத்தில் இன்று (31) ஆஜர்ப்படுத்தப்பட்ட ஜோஹான் பெர்னாண்டோவை, ஜனவரி 09 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலப்பகுதியில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஜோஹான் பெர்னாண்டோ நேற்று (30) கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக இருந்தபோது, சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை அவருக்குச் சொந்தமான எதனோல் நிறுவனத்தின் பணிகளுக்காக பயன்படுத்தியதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முறைகேடுகளின் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 2.5 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பணச் சலவை மற்றும் பொதுச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )