
சந்தேகநபரை கைது செய்ய லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில்கிண்ணியா பிரதி பொலிஸ் பரிசோதகர் கைது
கிண்ணியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பிரதி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் லஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிண்ணியா பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டிற்கமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முறைப்பாட்டாளர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பாக கிண்ணியா பொலிசில் முறைப்பாடொன்று வழங்கப்பட்டது .
அந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்ததன் பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய குறித்த பொலிஸ் பரிசோதகர் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டதற்காவும் அந்த பணத்தை வேறொரு நபர் மூலம் பெற முயற்சித்ததாகவும் கிண்ணியா போலீஸ் பரிசோதகர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் குறித்த போலீஸ் அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
லஞ்சம் ஊழல் விசாரணை திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகளால், நேற்று (31) மாலை 5.20 அளவில் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் பிரதி போலீஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டார்
சந்தேக நபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் .

