எரிபொருள் விலை உயர்வு ; ஆஸ்திரேலியா – நியூசிலாந்து விமானங்கள் இரத்து

எரிபொருள் விலை உயர்வு ; ஆஸ்திரேலியா – நியூசிலாந்து விமானங்கள் இரத்து

மத்திய கிழக்கில் நிலவும் போர் போன்ற சூழ்நிலையால் ஜெட் எரிபொருளின் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையேயான பல உள்நாட்டு மற்றும் நேரடி விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டு ஊடகங்களின் தகவலின்படி, மே மாதத்தில் சுமார் 12% விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆக்லாந்து மற்றும் கிறிஸ்ட்சர்ச், வெலிங்டன், சிட்னி, பிரிஸ்பேன் ஆகிய நகரங்களுக்கிடையேயான சேவைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று திகதிகளில் விமான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )