
போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுக்குஅமெரிக்கா வழங்கிய 15 அம்ச முன்மொழிவுகள்
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்கா 15 அம்சங்களைக் கொண்ட திட்ட வரைபடம் ஒன்றை ஈரானிடம் ஒப்படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் திட்டத்தில் ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறத்தல் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த ஆவணம் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் பரிமாறப்பட்டு வருவதாகவும், தெற்கு லெபனான் வாசிகளை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் எச்சரித்துள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
போர் தொடங்கியதிலிருந்து வான்வழித் தாக்குதல்கள் மூலம் ஈரானில் 82,000 இடங்கள் சேதமடைந்துள்ளதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் தெரிவித்துள்ளன.

