
மது அருந்திவிட்டு வாகனம்செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் தொடர்ந்தும் அமுலில்
மது அருந்திவிட்டு செலுத்தும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் இன்றும் தொடர்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.
, இந்த நடவடிக்கைகளுக்காக நிலைய மட்டத்தில் சுமார் 75% பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்தார்
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று பொலிஸ் போலிஸ் மாஅதிபர் அறிவுறுத்தியுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீர மேலும் கூறினார்.
CATEGORIES Sri Lanka

