மக்கள் போராட்டங்களுக்கு மத்தியில் நீண்டகாலமாக விடுவிக்கப்படாதிருந்த தையிட்டி திஸ்ஸ விஹாரை காணி விடுவிக்கப்பட தீர்மானம்

மக்கள் போராட்டங்களுக்கு மத்தியில் நீண்டகாலமாக விடுவிக்கப்படாதிருந்த தையிட்டி திஸ்ஸ விஹாரை காணி விடுவிக்கப்பட தீர்மானம்

யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் நேற்றை தினம் புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

நீண்டகாலமாக தீர்க்கப்படாத இந்த பிரச்சினை தொடர்பாக பேசும் ஆரோக்கியமான கலந்துரையாடலாக இது அமைய வேண்டும் என மாவட்ட செயலர் தெரிவித்தார்.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏகமனதாக திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியை மட்டுப்பாடான அளவில் எல்லையிட்டு, ஏனைய காணிகளை முதல் கட்டமாக விடுவிக்க இணக்கப்பாட்டினை தெரிவித்தனர்.

கட்டம் கட்டமாக காணிகளை விடுவிக்க, விகாராதிபதியின் ஒருமித்த சம்மதத்துடன் விடுவிக்க முடியும் என மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

காணி உரிமையாளர்களுடன் விடுவிக்கக் கூடிய காணிகளின் சாத்தியப்பாடுகள் மற்றும் எல்லைகள் தொடர்பாக ஆராய்வதாக அவர் தெரிவித்தார்

மேலதிக செயலர் (காணி), தெல்லிப்பளை பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )