தெஹிவளையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

தெஹிவளையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள ஒரு வேலைத்தளத்தின் முன்பாக நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்டதன் காரணமாகவே குறித்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் தெஹிவளை, சஞ்சயபுர பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் கல்கிசை பதில் நீதவான் கீத்ம பெர்னாண்டோவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )