
நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு ; 448 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (19) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 448 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 253 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 161 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 174 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 43 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,043 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

