
2025ல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறையிலிருந்து 11 பில்லியன் டொலர் வருமானம்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் ஊடாக 2025 ஆம் ஆண்டில் 11 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவரது விளக்கத்தின் படி, வெளிநாட்டு பணவனுப்பல்கள் மூலம் 7 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வருமானமும், சுற்றுலாத்துறையின் ஊடாக 3.2 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமும் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இன்று (05) காலை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், டித்வா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்திற்கொண்டு, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து இதுவரை நன்கொடையாக சுமார் 85 பில்லியன் ரூபாய் தொகை கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

