
ஸ்டட்கார்ட்டிடம் தோற்ற லெவர்குசன்
ஜேர்மனிய புண்டெலிஸ்கா தொடரில், தமது மைதானத்தில் (10) நடைபெற்ற வி.எஃப்.பி ஸ்டட்கார்ட்டுடனான போட்டியில் 1-4 என்ற கோல் கணக்கில் பயெர் லெவர்குசன் தோற்றது.
லெவர்குசன் சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெஜான்ட்ரோ கிரிமல்டோ பெற்றார்.
ஸ்டட்கார்ட் சார்பாக, ஜேமி லெவெலிங் இரண்டு கோல்களையும், மக்ஸிமில்லியன் மிடெல்ஸ்டட், டெனிஸ் உன்டாவ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்
CATEGORIES Sports News

