வெலிகந்தையில் கூரிய ஆயுதத்துடன் போலீசாரைத் தாக்க வந்த இளைஞர் போலீசாரால் சுட்டுக் கொலை

வெலிகந்தையில் கூரிய ஆயுதத்துடன் போலீசாரைத் தாக்க வந்த இளைஞர் போலீசாரால் சுட்டுக் கொலை

வெலிகந்தையில் கூரிய ஆயுதத்துடன் போலீசாரைத் தாக்க வந்த 28 வயதான இளைஞர் ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நேற்று மாலை வெலிகந்த பகுதியில் கடமையில் இருந்த போக்குவரத்து போலீசார் அப்பகுதியில் மூன்று பேரை ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்த உத்தரவிட்டனர்.

எனினும் அந்த மோட்டார் சைக்கிள் போலீசாரின் உத்தரவை மீறி நிறுத்தாமல் ஓட்டிச் செல்லப்பட்டது,

பின்னர் போலீசார் குறித்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரின் வீட்டிற்கு சென்ற போது அவர் வீட்டின் உள்ளே இருந்து கூரிய ஆயுதத்துடன் போலீசாரை நோக்கி சத்தமிட்டவாறு வந்து தாக்க முற்பட்டுள்ளார்.

இதனையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில்
குறித்த நபரின் கால் மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் இதற்கு முன்னர் ஏழு போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை பெற்றவர் எனவும் தற்போது இரண்டு குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தாகவும் போலீசார் தெரிவித்தனர்..

மோட்டார் சைக்கிளில் பயணித்த ஏனைய இருவரைக் கைதுசெய்ய போலீஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )