
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 578 பேர் கைது
பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கிணங்க, நாடளாவிய ரீதியில் நேற்று (22) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, 30,553 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 578 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்ட 18 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், நீதிமன்றங்களில் இருந்து பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளின் அடிப்படையில் 287 பேரும், திறந்த பிடியாணைகளின் கீழ் 169 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 456 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 114 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிற போக்குவரத்து குற்றச்செயல்களுக்காக 4,406 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

