
பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது பல்கலைக்கழகங்களின் கண்ணியத்திலோ அல்லது கல்வியாளர்களின் சுயாதீன செயற்பாடுகள் மற்றும் அவர்களினது கருத்துச் சுதந்திரத்திலோ தலையிடாத வகையில் அமைந்து காணப்பட வேண்டும்
Institutional Autonomy நிறுவனங்களின் சுயாதீனத்தையும், வெளிப்புற கட்டுப்பாடுகளின்றி நிர்வகிக்கும் உரிமையைப் பாதுகாத்தலும், Academic Independence அதாவது கல்வியைப் போதிக்கும் விரிவுரையாளர்களினது சுதந்திரத்தைப் பாதுகாத்தலும், உலக மரபாகவும், பொதுநலவாய உடன்பாடுகளின் பிரகாரம் வந்த சம்பிரதாயங்களின் பிரகாரமும் இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
பல்கலைக்கழக திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் காணப்படுவதனால், எதிர்க்கட்சிகளின் முன்மொழிவுகளையும் இங்கு முன்வைக்க விரும்புகிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடல்கள் முறையாக நடக்கவில்லை என்றே தெரிகிறது. தற்போது காணப்படும் சட்டம் திருத்தப்படும் வரை ஏலவே காணப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அது அரசியலமைப்புச் சட்டத்தையே மீறும் செயலாக அமையும்.
பல்கலைக்கழக திருத்தச் சட்டத்தின் பல்வேறு விதிகள் நடைமுறையில் இருக்கத்தக்க, புதிய சட்டம் இயற்றப்படும் வரை துறைத் தலைவர்கள் பீடாதிபதிகள் நியமிப்பதை இடைநிறுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன. இது சட்டத்தின் ஆட்சியை கடுமையாக மீறும் செயலாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இந்தப் புதிய சட்டத்தில் துறைத் தலைவர்கள் மற்றும் பீடாதிபதிகள் நியமனம் தொடர்பாக பல்வேறு விதிகள் காணப்படுவதால், அவை விரிவுரையாளர்களின் சுதந்திரத்தை மீறும் விதமாக அமைந்து காணப்படுகின்றன. அதிகாரத்தை ஓரு இடத்திற்கு திசைமுகப்படுத்துவது, பல்கலைக்கழகம் கொண்டிருக்க வேண்டிய சுதந்திரத்தை மீறுவதாக அமைந்து காணப்படுகின்றது. இது பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றன.
அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள பிரகாரம், பேசும் உரிமையை யாராலும் பறிக்க முடியாது. இது அடிப்படை உரிமைகளையும் மீறு செயலாகவும் அமைந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
சிந்தனைச் சுதந்திரமும் ஆராய்ச்சி சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும். இது நாட்டின் பல்கலைக்கழகங்கள் மீதான நம்பிக்கை தொடர்பான பிரச்சினையாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

