
வைத்தியர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்றும் தொடர்கிறது!
வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்த போராட்டம் இன்றும் தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் சாதகமான பதில்களை வழங்கவில்லை என அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
48 மணித்தியாலங்களின் பின்னரும் பணிப்பகிஷ்கரிப்பை மேலும் நீடிப்பதா என்பது குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

