நிலக்கரி மோசடியை மூடி மறைப்பதற்கு மே மாதத்தில் 30% மின்கட்டண அதிகரிப்பு

நிலக்கரி மோசடியை மூடி மறைப்பதற்கு மே மாதத்தில் 30% மின்கட்டண அதிகரிப்பு

ஏப்ரல் மாதத்தில் 11% மின்கட்டணம் அதிகரிக்கப்பட்ட நிலையில், மீண்டுமொறு முறை 30% அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 41.5 பில்லியன் வருமானம் எதிர்பார்க்கப்படுகின்றன. இதில் பாதியான ரூ. 20.5 பில்லியன் தரம் குறைந்த நிலக்கரி மோசடியால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட பயன்படுத்தப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தரம் குறைந்த நிலக்கரியால் ஏற்பட்ட நட்டத்தை நிறுவனங்களை விடுத்து, மக்களே செலுத்துகின்றனர்.

தரம் குறைந்த நிலக்கரியால் 250 கிகாவோட் மணி நேர மின்சாரம் இழக்கப்பட்டுள்ளன. இதை ஈடுசெய்ய டீசல் மின் நிலையங்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்வதற்கு ரூ. 20.5 பில்லியன் தேவைப்படுகின்றன. இந்த நட்டத்தை நிறுவனங்களிடம் இருந்து அறவிடுவோம் என்று ஜனாதிபதி கூறியிருந்தாலும், உண்மையில் 75 இலட்சம் மின்சார பாவனையாளர்களே இதை செலுத்த வேண்டி காணப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

எரிவாயு நுகர்வோருக்கு இன்னும் நிவாரணம் இல்லை.

நாட்டில் 61 இலட்சம் குடும்பங்களில் 25 இலட்சம் குடும்பங்கள் எரிவாயைப் பயன்படுத்தி வருகின்றன. இவர்களுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை. மே மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ள 30% மின்கட்டண அதிகரிப்பை மேற்கொள்ளும் தீர்மானத்தை உடனடியாக திரும்பப் பெறுங்கள். டீசல் அலகிற்கு ரூ. 100 வீதம் அறவிடும் திட்டத்தை கைவிட்டு, நட்டத்திற்கு காரணமான நிறுவனங்களிடமிருந்து அதை அறவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் நாட்டு மக்களை அநாதரவாக்கிவிட்டது.

இன்று விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்பட்டபாடில்லை. பெரும் போக பருவத்தில் ஈர நெல் ரூ. 85-90க்கும், 14% ஆன ஈர நெல் ரூ. 100-103க்கும் விற்கப்படுகின்றன.

ரூ. 120 உத்தரவாத விலையைப் அரசாங்கம் பெற்றுத் தருவோம் என தற்போதைய ஆளும் தரப்பினர் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். ரூ. 150 உத்தரவாத விலையை சட்டமாக்கித் தருவோம் என்றும் கூறியிருந்தனர்.

ஆனால் எந்த ஒன்றும் நடக்கவில்லை. தற்போது அரசாங்கம் மின்சார பாவனையாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் என அனைவரையும் நிராதரவாக்கிவிட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் சேறு பூசி கேலி செய்யாமல், நாட்டுக்குத் தேவையான எரிபொருள், எரிவாயு, உரம் போன்றவற்றை கொண்டுவர நடவடிக்கை எடுங்கள்.

உரங்களுக்குச் சலுகை விலைகளைப் பெற்றுத் தருவோம் என்று வாக்குறுதிகள் பல வழங்கியிருந்தாலும் யூரியா உள்ளிட்ட உர வகைகளுக்கு தற்போது நாட்டில் தட்டுப்பாடு நிலவுகின்றன.

மத்திய கிழக்கில் இரண்டு வார போர்நிறுத்தம் காணப்படுவதனால், இந்த தருணத்தில் நாட்டிற்குத் தேவையான எரிபொருள், உரம், எரிவாயு உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Senario Plan ஜ வகுக்குப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நாம் கூறும் சமயங்களில் தமது அடிமைகளை வைத்து சமூக வலைதளங்களில் சேறு பூசி, கேலி செய்யாமல் அவசரகால மூலோபாய திட்டத்தை வகுக்குமாறு நான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன்.

இப்போது உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்து காணப்படுகின்றன. ஆகையினால் நமது நாட்டிலும் விலைகளைக் குறைக்க வேண்டும்.

உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்து காணப்படுகின்றன. மத்திய கிழக்கு யுத்தம் என்ற பெயரில் அதிகரிக்கப்பட்ட எண்ணெய் விலைகளை குறைக்க வேண்டும். அந்த சலுகை மக்களுக்கு பெற்றுக் கொடுங்கள் என்று சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

நேற்று வழங்குவதாக சொன்ன நிவாரணங்களை” டித்வா நிவாரணப் பொதி” போல் வழங்காமல் இருந்து விடாதீர்!

39 நாட்கள் ஆழ்தூக்கத்தில் இருந்து திடீரென்று எழுந்து வந்து ஜனாதிபதி நேற்று வாக்குறுதிகள் பலவற்றையும் பாராளுமன்றத்தில் பிரஸ்தாபித்தார். டித்வா சூறாவளி பாதிப்பினால் வேதனைப்படும் மக்களுக்கு பெற்றுத் தருவோம் என வழங்கிய நிவாரண வாக்குறுதிகள் இன்னும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

நாட்டில் சுகாதாரக் கட்டமைபு முற்றிலுமாக சீர்குலைந்து போயுள்ளன. மட்டக்களப்பு வைத்தியசாலையில் இயந்திரங்கள் செயலிழந்துபோயுள்ளன.

இதற்குத் தேவையான நடவடிக்கைகள் எதுவும் இதுவரையில் எடுக்கவில்லை. ரஜரட்ட பிரதேசத்தில் காணப்படும் குட்டி வீட்டிற்கும் ரூ. 80,000 மின் கட்டணம் வழங்கப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அமைச்சர்கள் சரியாக வேலை செய்யாமையினால் அரச ஊழியர்கள் பல பிரச்சினைகளை முகம்கொடுத்து வருகின்றனர்.

அமைச்சர்கள் சரியாக பணியாற்றாததால் அரச ஊழியர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இப்போதாவது அரச ஊழியர்களுக்கு அதிகமான பயிற்சிகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். பிரதேச செயலக மட்டத்தில் குறைகேள் அதிகாரி (Ombudsman) ஒருவரை நியமிக்க வேண்டும்.

இது போன்ற முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு அரச ஊழியர்களுக்கு இடமொன்று காணப்பட வேண்டும். சுகாதாரத் துறை வேலைநிறுத்தம் நிறுத்தப்பட்ட விடயத்தில் அரசாங்கம் மகிழ்ச்சி தெரிவித்தாலும், சுகாதார அமைச்சர், அவர்களினது பிரச்சினைகளை கேட்க வேண்டும்.

கஷ்ட பிரதேச சேவைக்காக காணப்பட்ட வைத்தியசாலைகள் 393 இலிருந்து 126 ஆக இந்த அரசாங்கம் குறைத்துள்ளது. கஷ்டப் பிரதேச சேவைக் காலம் 1 வருடம் என்பதை 2 வருடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

வேலைநிறுத்தங்கள் குறித்து ஊழியர்கள் மீது விரல் நீட்டுவது போல், அமைச்சர் மீதும் விரல் நீட்டப்படுவதனால், இது குறித்து அமைச்சர் அவர்களை அழைத்துக் கலந்துரையாட வேண்டும்.

இந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசாங்கத்தின் இடமாற்றக் குழுக்கள் இப்போது அரசியல்மயமாகி (தனிப்பட்ட ஆதரவாளர்களுக்குச் சாதகமாக) பெலவத்தமயமாகி காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பெண்களுக்கு நடத்தப்படும் வாய்மொழி மற்றும் உடல் ரீதியான வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எப்போதும் சொல்வது போல், நிரந்தரப்படுத்தப்படாத டெங்கு ஒழிப்பு உதவியாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும். இவ்வாறானோர் 301 பேரளவில் காணப்படுகின்றனர். உடனடியாக இவர்களை பணியில் நிரந்தரமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பாராளுமன்றத்தில் பணியாற்றிய பெண் ஒருவருக்கு துன்புறுத்தல் நடந்த சந்தர்ப்பத்தில், உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணைகளை முன்னெடுத்த குழுவில் வாய்மொழி துன்புறுத்தலே நடந்ததாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போதாவது அந்த அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். பெண்களுக்கு இத்தகைய தொல்லைகள் நேராதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )