
நாளை முதல் நாடு தழுவிய அரச வைத்தியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம்
சுகாதார அமைச்சினால் இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (26) முதல் நாடு தழுவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் அரச வைத்தியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த தீர்மானம் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டதாக சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் கடந்த இரண்டு நாட்களாக அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், அந்த பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8.00 மணியுடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எனினும், கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாத காரணத்தால், நாளை (26) முதல் நாடு தழுவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

