பாதிரியார் தாக்குதல் சம்பவம் ; 6 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்

பாதிரியார் தாக்குதல் சம்பவம் ; 6 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்

கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கம்பஹா பிராந்திய குற்ற விசாரணைப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் படைப்பிரிவைச் சேர்ந்த 6 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நேற்று (26) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், அவர்களை 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், குறித்த சந்தேகநபர்களை அடையாளம் காணும் வகையில் 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு நடத்தவும் கம்பஹா நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )