
பெண் ஒருவர் கொலை ; சந்தேகநபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரல்
கூர்மையான ஆயுதத்தால் பெண்ணொருவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த குற்றச்செயலுடன் தொடர்பாக, பொலிஸாரால் தேடப்பட்டு வரும் சந்தேகநபரைக் கைது செய்வதற்காக பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஏப்ரல் 18ஆம் திகதி, மத்துகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொலஹேன பிரதேசத்தில், 34 வயதுடைய பெண்ணொருவர் கூர்மையான ஆயுதத்தால் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விடயங்கள் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளதுடன், குற்றச்செயலுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், குறித்த சந்தேகநபரைக் கைது செய்வதற்காக பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடுகின்றனர்.
சந்தேகநபரின் விபரங்கள்:
பெயர்: பிராமணகே தொன் சனத் ரவீந்திர நிலாந்த
முகவரி: இல. 78/01, இஹலகந்த, அகலவத்தை
தேசிய அடையாள அட்டை இலக்கம்: 840321401V
சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களுக்கு உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்:
தலைமையகப் பொலிஸ் பரிசோதகர் – மத்துகம: 071-8591701
பொறுப்பதிகாரி (குற்றத் தடுப்பு பிரிவு) – மத்துகம: 071-8594381

