
ரயில் விபத்தில் முதியவர் பலி
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உதயநகர் பகுதியில்,நேற்று (26) இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சைக்கிளில் புகையிரத கடவையை கடக்க முயன்ற முதியவர் ஒருவர், அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி ரயிலுடன் மோதுண்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில், கிளிநொச்சி ஆனந்தபுரத்தைச் சேர்ந்த 82 வயதுடைய முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

