
பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் ஆறு பொதுமக்கள் என மொத்தம் 10 சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று (28) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை பரிசீலனை செய்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இதற்கமைய, குறித்த அனைத்து சந்தேகநபர்களும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளனர்.
CATEGORIES Sri Lanka

