வட்டுக்கோட்டையில் சட்டவிரோத மதுபான விற்பனை ;  ஒருவர் கைது

வட்டுக்கோட்டையில் சட்டவிரோத மதுபான விற்பனை ; ஒருவர் கைது

வட்டுக்கோட்டைப் பகுதியில் வீட்டில் வைத்து சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் இன்று (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு மதுபானத்தை விற்பனை செய்த தருணத்திலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.எம்.எச். புத்திக்க சிறிவர்தனவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களுடன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )