
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக மார்சில் வழக்கு தாக்கல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, எதிர்வரும் மார்ச் மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட வழக்கின் முன்னேற்றம் குறித்து விளக்கம் அளித்த சட்டமா அதிபர் திணைக்களம் இந்த விடயத்தை நீதிமன்றிற்கு அறிவித்தது.

