
போதைப்பொருட்களுடன் இருவர் கைது
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளுவகொட்டுவ பகுதியில், கொக்கேயின் மற்றும் குஷ் வகை போதைப்பொருட்களுடன் இருவர் செவ்வாய்க்கிழமை (27) நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 10 கிராம் 650 மில்லிகிராம் கொக்கேயின் போதைப்பொருளுடன் முதலாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட முதல் சந்தேக நபர், 29 வயதுடைய தளுவகொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பலங்கதுரைய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சுற்றிவளைப்பில், 110 கிராம் குஷ் போதைப்பொருளும், போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டதுடன், இரண்டாவது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டாவது சந்தேக நபர் 29 வயதுடைய, தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

