பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்

பிலிப்பைன்சின் மோரோ கல்ப் பகுதியில் இன்று (29) கடுமையான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

தேசிய நிலநடுக்க அறிவியல் மையத்தின் தகவலின்படி, குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக அளவிடப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட மனித அல்லது பொருள் சேதங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )