ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு ; மேலும் ஒரு சந்தேக நபர் கைது

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு ; மேலும் ஒரு சந்தேக நபர் கைது

ஜிந்துப்பிட்டி பகுதியில் கடந்த 16ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில், மற்றொரு சந்தேக நபர் நேற்று (29) கொழும்பு வடக்கு பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டை முச்சக்கர வண்டியில் வந்த குழுவொன்றே மேற்கொண்டு பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் ஹெட்டியாவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று (30) புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கரையோர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )