எல்பிட்டியவில் 14 வயது மகளை வெட்டி கொலை செய்த தந்தை

எல்பிட்டியவில் 14 வயது மகளை வெட்டி கொலை செய்த தந்தை

தொலைபேசி அழைப்பு தொடர்பாக ஏற்பட்ட தகராறு தீவிரமடைந்தது ,தந்தை தனது 14 வயது மகளை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று எல்பிட்டிய ,தெல்கட ஊரகஸ்மன்ஹந்திய பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுமிக்கும் அவரது தந்தைக்கும் இடையே நேற்று ஏற்பட்ட தகராறில் தந்தை தனது மகளை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த மகள் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

சந்தேகநபரான தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர், மேலும் சிறுமியின் உடல் எல்பிட்டிய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து ஊரகஸ்மன்ஹந்திய போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )