
டி20 உலகக் கிண்ண போட்டிகளை தவறவிடும் ஜோஷ் ஹேசில்வுட் !
அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் (Josh Hazlewood), காயம் காரணமாக டி20 உலகக் கிண்ண ஆரம்ப போட்டிகளை தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே,அவுஸ்திரேலியா டி20 உலகக் கிண்ண அணியில்
பயண மாற்று வீரராக (Travelling Reserve) சீன் அபோட் (Sean Abbott) இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
அதேவேளை, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை தவறவிட்ட
கிளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell), நாதன் எலிஸ் (Nathan Ellis)
மற்றும் டிம் டேவிட் (Tim David) ஆகியோர் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கிண்ண போட்டிகளில் அவுஸ்திரேலியா அணியுடன் இணைந்துகொவர்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது
டி20 உலகக் கிண்ண தொடருக்கு முன்பாக, எதிர்வரும்
வியாழக்கிழமை நெதர்லாந் அணிக்கு எதிராக
அவுஸ்திரேலியா அணி பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளது.
மேலும் , டி20 உலகக் கிண்ண தொடரில் அவுஸ்திரேலியா அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

