
வெலிகம பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் நியமனம்
வெலிகம பிரதேச சபையில் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த சிந்தக்க ஹேவா பதிரண இன்று (02) தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
வாக்கெடுப்பில், அவர் ஆதரவாக 22 வாக்குகள், எதிராக 21 வாக்குகள் கிடைத்துள்ளது.
இதற்கு முன், பிரதேச சபையின் தலைவராக பணியாற்றிய லசந்த விக்ரமசேகர கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ அறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

