
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை-6 பேர் கைது-இரத்மலானையில் சம்பவம்
இரத்மலானை, தர்மாராம வீதி பகுதியில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
இரத்மலானை, தர்மாராம வீதி புகையிரத பாதைக்கு அருகில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளது.
இதன்போது 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கிரிக்கெட் மட்டை மற்றும் விக்கெட் கம்புகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக 4 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட மொத்தம் 6 பேரை கல்கிசை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவர் இரத்மலானை, ஸ்ரீ தர்மாராம வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கல்கிசை பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

