தெற்கு அதிவேக வீதியில் விபத்து ;ஒருவர் உயிரிழப்பு

தெற்கு அதிவேக வீதியில் விபத்து ;ஒருவர் உயிரிழப்பு

தெற்கு அதிவேக வீதியில் இன்று (06) இடம்பெற்ற பாரிய சாலை விபத்தில் லொறி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொடாங்கொடை மற்றும் வெலிப்பன்ன பகுதிகளுக்கு இடைப்பட்ட 40ஆவது மைல்கல் அருகே, வெலிப்பன்ன பகுதியை அண்மித்துப் பயணித்துக் கொண்டிருந்த கெண்டைனர் வாகனத்தின் பின்னால் வந்த லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் தாக்கத்தால் லொறி கடுமையாக சேதமடைந்ததுடன், அதனை ஓட்டிச் சென்ற சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தையடுத்து மாத்தறை நோக்கிச் செல்லும் பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழித்தடத்தை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )